சத்தியமங்கலம்:  ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதால், திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்து உள்ளார்.

அரசியல் கட்சி தொடங்குவதாக 2017ம் ஆண்டு தெரிவித்த ரஜினி, இன்று அரசியல் கட்சி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.  தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டியது  கட்டாயம் என்றும், ஜனவரியில் கட்சியை தொடங்க உள்ளதாகவும்,  தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது என்றும், அரசியல் களத்தில் தான் வெற்றி பெற்றால் அது மக்களுக்கான வெற்றியாக இருக்கும் என்று பரபரப்பாக தெரிவித்தார்.

ரஜினியின் அரசியல் அறிவிப்பு குறித்து அரசியல் கட்சியினர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சில அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், பல அரசியல் கட்சிகள், ரஜினியால் தமிழக அரசியலில் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்று கூறி வருகின்றன.

இதற்கிடையில், திமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஸ்டாலினின் சகோதரர், மு.க.அழகிரி ஏற்கவே ரஜினியுடன் தொடர்பில் இருந்து வருகிறார். இன்று முதல் ஆளாக ரஜினிக்கு வாழ்த்துதெரிவித்தார். மேலும்  அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சத்தியமங்கலம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து, திமுகவுக்கு ஆதரவு திரட்டி வரும் கனிமொழி எம்.பி. சத்தியமங்கலம்  பூ மார்கெட்டில் செல்வன் அவர்களிடம் வாங்கிய பூவுக்கு காசு கொடுக்க முயன்றேன். அவர் சிரித்துவிட்டு, கையில் பச்சை குத்தியிருந்த உதய சூரியனை காட்டினார்.

இதையடுதுது செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதால், திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளார்.