சென்னை:

கேரளாவில் வேகமாக பரவி வரும் நிபா வைரஸ் தொற்று காரணமாக 15க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில் 25க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் நிபா வைரஸ் தொற்று இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறி உள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கேரளாவில்  பரவி வரும் நிபா வைரஸ் தொற்று தமிழகத்தில் பரவ வாய்ப்பில்லை என்றும், மேலும் தமிழகத்தில் நிபா வைரஸ் தொற்று ஏற்படாதவாறு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், கேரளாவை ஒட்டிய தமிழக  பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன என்றும் அவர்  கூறினார்.

ல்வேறு வகையான நோய்களை கேள்விப்பட்டிருக்கும், ஆனால், தற்போது கேள்விப்படும் நிபா வைரஸ் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதே வேளையில் இந்த நிபா வைரஸ்  புதிய அறிமுகம் கிடையாது. ஏற்கனவே  கடந்த 1998ம் ஆண்டு இந்த வைரசின் தாக்குதல்  முதன்முறையாக மலேசியாவில் கண்டறியப்பட்டது.

இந்த வைரஸ் பரவ காரணம் வவ்வால்கள் என்றும் கண்டறியப்பட்டது.  மரங்களில் வாழ்ந்து வரும் வவ்வால் களால் இந்த வைரஸ் பரவியது தெரிய வந்தது.   வவ்வால் கடித்த பழங்களை உண்பது வைரஸ் பரவுவதற்கு முக்கிய  காரணம் என்றும் கூறப்படுகிறது.

பொதுவாக வவ்வால்கள் படித்த பழம் இனிக்கும் என்று பெரும்பாலனோர் விரும்பி உண்பது வழக்கம். ஆனால், அதன் வாயிலாகவே வைரஸ் தொற்று ஏற்பட்டு மக்களை அச்சுறுத்தி வந்துள்ளது கண்டறியப்பட்டது.

இந்த நிபா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்கள், தலைவலி, மூச்சு விடுவதில் சிரமம், மயக்கம் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகி காய்ச்சல் ஏற்படுது. இந்த காய்ச்சல் பின்னர் மூளைக்காச்சலாகி உயிரை பறித்துவிடுகிறது.