தடைகளை மீறி வெற்றி பெற்றதற்கு காங்கிரஸ் எம்பிக்கள் பெருமைப்பட வேண்டும்: ராகுல் காந்தி

புதுடெல்லி:

தடைகளை மீறி வெற்றி பெற்றதற்கு காங்கிரஸ் எம்பிக்கள் பெருமைப்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.


காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று புதுடெல்லியில் நடந்தது. கடந்த முறை எதிர்கட்சித் தலைவராக இருந்த மல்லிகார்ஜுன் கார்கே, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தோல்வியடைந்தார்.

இதனையடுத்து, இன்று நடந்த காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சிக் கூட்டத்தில் ராகுல் காந்தி எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்றுள்ள 52 பேரும், பாஜகவுக்கு எதிராக தினமும் போராடுவோம்.

நம்மிடம் 45 எம்பிக்கள் இருந்தபோது, ஆளும்கட்சியை எதிர்கொள்வது கடினம் என்று நினைத்தேன்.
282 பேர் கொண்ட பாஜகவை எதிர்கொள்வது எளிது என சில வாரங்களில் புரிந்தது.

சுதந்திரத்துக்குப் பின் தேர்தலில் தான் போட்டியிட்டனர். அரசியல் கட்சிகளை எதிர்த்து போட்டியிடவில்லை. ஆனால் நாட்டின் ஒவ்வொரு அமைப்பையும் எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது.

தற்போது பல்வேறு அமைப்புகளின் தடையை முறியடித்துத் தான் காங்கிரஸ் எம்பிக்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள்.  இதற்காக நீங்கள் பெருமைப்பட வேண்டும்.

நாம் பாஜகவை எதிர்த்துப் போராடும் சிறந்த எதிர்கட்சியாக செயல்படுவோம் என்றார்.

 

கார்ட்டூன் கேலரி