Random image

எச்.ராஜாவால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை: பாஜகவுக்கு காவடி தூக்கும் அமைச்சர் மா.பா

சென்னை:

நீதிமன்றம், காவல்துறையை கீழ்த்தரமாக விமர்சனம் செய்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படவில்லை என்றும், அதனாலேயே அவர் கைதுசெய்யப்படவில்லை என்று அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் வக்காலத்து வாங்கி பேசினார்.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் மா.பா.பாண்டியராஜன்

பா.ஜ.க. தேசிய செயலாளரு எச்ராஜா போலீசையும், உயர்நீதிமன்றத்தையும் கேவலமாக பேசிய  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் பேசிய எச்.ராஜா,  “போலீசுக்கு வெட்கமாக இல்லையா, உங்க டிஜிபி வீட்டுல ரெய்டு நடந்த அப்பவே நீங்க எல்லாம் யூனிபார்மை கழட்டிட்டு வீட்டுக்கு போய் இருக்கனும். போலீஸ் முழுக்க லஞ்சம்தான். நூறு சதவிகிதம் ஈரல் கெட்டிருக்கு. இஸ்லாமிய, கிறிஸ்தவர்களிடம் லஞ்சம் வாங்கிட்டு செயல்படுறீங்க. வேண்டுமானால் நான் லஞ்சம் தருகிறேன்

இன்னைக்கு புழல் சிறையில தீவிரவாதிகள் கலர் டீவி வச்சு இருக்காங்க. உங்களுக்கு எல்லாம் எல்லாம் வெட்கமா இல்லையா” என்றும், “ஹைகோர்ட் என்ன மயிரு, மண்ணாங்கட்டி” என்றும் அவர் பேசியுள்ளார்.

எச்.ராஜாவின் பேச்சு பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது. “காவல்துறை மற்றும் உயர்நீதி மன்றத்தை அநாகரிகமாக விமர்சித்த  எச்.ராஜா மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றன” என்றும் சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழக அமைச்சர் மா.பா.பாண்டியராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர்,  எச்.ராஜாவின் பேச்சால் தமிழகத்தில்  சட்டம் ஒழுங்குப் பிரச்சினை இல்லை. அதனால் கைது செய்யவில்லை. அதேபோலத்தான் எஸ்.வி.சேகர் விஷயத்திலும் கைது செய்யும் சூழல் ஏற்படவில்லை.

சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டிருந்தால், இந்நேரம் அவர் கைதுசெய்யப்பட்டிருப்பார். ஆனால் எச்.ராஜா வின் பேச்சால், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை. அதனால்தான், காவல்துறையினர் அவரைக் கைது செய்யவில்லை. அப்படி ஒருவேளை சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வரும் சூழலில், காவல் துறையினர் கைது செய்யும் முடிவை எடுப்பார்கள். கைது செய்வார்கள். அது அவர்கள் கையில் இருக்கிறது

மற்றபடி, பாஜகவுக்கு அடிமையாக அதிமுக இருக்கிறது என்பதிலும் அவர்களுக்கு சேவகம் செய்கிறது என்பதிலும் எந்த உண்மையும் இல்லை. இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

அமைச்சரின் பேச்சு சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.