மதுரை:
பட்டியலின பிரிவை அறவே நீக்கிவிட்டால் அரசு வழங்கும் எந்த சலுகையும் எங்களுக்கு தேவையில்லை என்று புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், தேவேந்திர குல வேளாளர் என்ற பெயர் மாற்றம் ம ட்டும் போதாது. பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற தொடர்ந்து போராட வேண்டும்.

நாட்டின் மூத்த குடிமக்கள் நாம். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வஞ்சகத்ததால் வீழ்த்தப்பட்டு விட்டோம். பட்டியலில் சேர்க்கப் பட்டதால் எந்த சலுகையும் இது வரை பெறவில்லை.

நிலத்தைக் கொடுத்திருந்தால் முன்னேறியிருப்போம். தற்போது சொந்த ஊரிலேயே வணிக நிறு வனம் நடத்த முடியாத நிலையில் இருக்கிறோம்.

இதனால் தாங்க முடியாத இன்னல்களும், இடர்பாடுகளும், இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. நமது வரலாற்றை திருத்தி எழுத வேண்டும் என்றால் பட்டியலினத்தைவிட்டு வெறியேற வேண்டும். நமது பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கங்களை சில கட்சிகள் நசுக்கிவிட்டன. அனைத்தையும் பணத்துக்கு அடிமையாக்கி விட்டனர். வாக் குக்கு பணம் வாங்கிக் கொண்டு 5 ஆண்டுகளுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிடக் கூடாது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பட்டியலின பிரிவை அறவே நீக்கிவிட்டால் அரசு வழங்கும் எந்த சலுகையும் தேவையில்லை என்றும் அனைவருக்கும் சமமாக திறமை அடிப்படையிலான சலுகைகளே போதும் என்றும் அவர் கூறினார்.