வாஷிங்டன்

மெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை எந்த ஒரு உயர் அதிகாரியும் வரவேற்காமல் அவர் மெட்ரோ ரெயிலில் சென்றுள்ளார்.

எந்த ஒரு நாட்டின் பிரதமரும் மற்றொரு நாட்டுக்கு செல்லும் போது அவரை வரவேற்க அந்நாட்டின் அமைச்சர், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்பது வழக்கமாகும்.   பாகிஸ்தான் பிரதமர் தற்போது அமெரிக்கா சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.   பாகிஸ்தானில் தற்போதுள்ள நிதி நெருக்கடி காரணமாக அவர் கத்தார் ஏர்வேஸ் பயணிகள் விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

அந்த விமானம் டல்லாஸ் விமான நிலையத்தை அடையும் போது அவரை வரவேற்க அமெரிக்க அரசை சேர்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்ட யாரும் வரவில்லை.   பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி அவரை விமான நிலையத்துக்கு வந்து வரவேற்றுள்ளார்.  இம்ரான் கான் அவருடன் இணைந்து மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளார்.

அவரை மெட்ரோ ரெயில் வரை அமெரிக்க தற்காலிக பாதுகாப்பு அதிகாரி மேரி கேட் ஃபிஷர் வந்து வழியனுப்பி உள்ளார்.   இம்ரான் கான் தற்போது அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரின் இல்லத்தில் தங்கி உள்ளார்.    இன்று மாலை இம்ரான் கான் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

 

தனது மூன்று நாள் சுற்றுப்பயணத்தில் இம்ரான்கான் ஐ எம் எஃப் மற்றும் உலக வங்கி தலைவர்களை சந்திக்க உள்ளார்.   பாகிஸ்தானுக்கு ஐ எம் எஃப் 6 பில்லியன் டாலர் உதவி அளிக்க உள்ளது குறித்து அப்போது இம்ரான் கான் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.