சென்னை:

னது பிறந்தநாளையொட்டி புதிய செயலியை அறிமுகப்படுத்தி கமல், செய்தியாளர்களின் சரமாரியான கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது,  நான் எப்போதோ அரசியலுக்கு வந்து விட்டேன் என்றும் இனிமேல் வெளியே செல்ல மாட்டேன் என்றார்.

மேலும், பல ரசிகர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் சில ரசிகர்கள் அரசியலுக்கு வரவேண்டாம் என்றும் கூறுகிறார்களே என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த கமல்,  நான் வந்துவிட்டேன்,  அரசியலை தொடங்கி விட்டேன் என்றார்.

மேலும், இந்த மேடை, அரசியலுக்கு நான்  வந்து விட்டேன். வரவா? வேண்டாமா? என்று கேட்பதற்கான மேடையல்ல என்று கூறிய கமல், நான் அரசியலுக்கு எப்போதோ வந்து விட்டேன். இதிலிருந்து வெளியே போக மாட்டேன் என்று கூறினார்.

மேலும் மற்றொரு செய்தியாளர்,  அரசியல் நேர்மையற்றவர்களுக்கு உங்கள் கட்சியில் இடமிருக்குமா என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்த கமல்,

நிச்சயமாக செய்ய வேண்டியதை உடனே செய்ய வேண்டும்  என்றும்,  என்ன செய்யணுமோ அதை செய்வேன் அதை செய்யாமல் விட்டதால்தான் இங்கே வந்து நிற்கிறோம். சினிமா எடுப்பதே மிகவும் கஷ்டம். நான் எடுக்கும் திரைப்படம் உலகத்தரத்திற்கு இருக்க வேண்டும் அரசியல் அதை விட மிக சிரமமானது என்றார்.

மாற்று கட்சிகளை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் தங்களது கட்சிக்கு வந்தால் சேர்த்துக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த கமல்,

நேர்மையற்றவர்களுக்கு இடமில்லை என்றும்,  பழைய பேக்கேஜ்களுக்கு இங்கே இடமில்லை. நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவதுதான் என் கனவு என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

மேலும்,  ஏற்கனவே ஊழலில் சிக்கியவர்களுக்கு இங்கே இடமில்லை என்றும் கூறினார்.