வாஷிங்டன்,

மெரிக்க பொருளாதாரத்துறையின் உயர் பதவிகளில் ஏழைகளுக்கு இடமில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பொதுமக்களிடையே பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் பதவிகளில் பணக்காரர்களையே பணி அமர்த்த விரும்புவதாக கூறினார்.

மேலும், அமெரிக்காவின் பொருளாதார செயலர் பதவியில்  வில்பர் ரோஸ் என்ற பெரும் பணக்காரர் நியமனம் செய்யப்பட்டது குறித்து தன்னிடம் சிலர் கேட்கிறார்கள்,  “அதற்குக் காரணம் அப்படிப்பட்ட நபரையே நாங்கள் விரும்புகிறோம்” பதில் அளித்ததாகக் கூறினார்.

பொருளாதார செயலராக உள்ள வில்பர் ரோஸ் மற்றும் பொருளாதாரத்துறை ஆலோசகராக இருக்கும் கேரி கோன் ஆகிய இருவரும் பணக்காரர்கள்தான்.

ஏனென்றால் அந்த பதவிகளில் இருப்பவர்கள் நிறையை விஷயங்களை விட்டுக்கொடுக்க வேண்டி யிருக்கும் என்று அவர் கூறினார்.

“அனைத்து மக்களையும் நான் நேசிக்கவே செய்கிறேன். அவர்கள் பணக்காரராக இருந்தாலும் சரி; ஏழையாக இருந்தாலும் சரி. ஆனால், உயர் பதவிகளில் ஏழைகளில் இருப்பதை நான் விரும்ப வில்லை.” என்றும் அவர் வெளிப்படையதாக தெரிவித்தார்.

டிரம்பின் அதிரடி பேச்சு குறித்து அமெரிக்க மக்களிடையே விவாதம் நடைபெற்று வருகிறது.