நகைக் கடன்களை ரத்து செய்யும் திட்டமே இல்லை: செல்லூர் ராஜூ

சென்னை:

கூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடி செய்ய வாய்ப்பே இல்லை என்று கூறிய அமைச்சர் செல்லூர் ராஜு, இதுகுறித்து, திமுக தலைவர் ஸ்டாலினுடன் கேளுங்கள் என்று கூறினார்.

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, சென்னை  மதுரவாயலில், மத்திய கூட்டுறவு வங்கி கிளையை திறந்த வைத்து வங்கி பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அவருடன் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழா முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரிடம், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்கள், விவசாய கடன்கள் ரத்து செய்யப்படுமா, தேர்தலின்போது திமுக அறிவித்திருந்தே என்றுசெய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சசர், கடன்கள் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பே இல்லை என்றவர், அதுகுறித்து எந்தவித திட்டமும் கிடையாது என்று மறுப்பு தெரிவித்தார். மேலும், லோக்சபா தேர்தலின்போது திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார், ஆனால், அவர் எதை நினைத்து கூறினார் என்று தெரியவில்லை… நீங்களே அவரிடம்தான் கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும்,  கூட்டுறவு வங்கியில் விவசாய கடன் தள்ளுபடி என்று தவறான தகவல் பரவி வருகிறது இது தவறான தகவல் என்று கூறியவர் , வங்கியில் உள்ள கடனைதிரும்ப செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.

கார்ட்டூன் கேலரி