Random image

1963 ஆம் வருடம் குடியரசு தின அணிவகுப்பில் ஆர்எஸ்எஸ் பங்கேற்றதா? :விடையில்லா கேள்வி

டில்லி

டந்த 1963 ஆம் வருட குடியரசு தின அணிவகுப்பில் ஆர் எஸ் எஸ் பங்கேற்றதாக கூறி வருகையில் அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை என தெரிய வந்துள்ளது.

ஆர் எஸ் எஸ் இயக்கத்தை குறித்து காங்கிரஸ் கட்சி கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து வைத்து வருகிறது.   சமீபத்தில் லண்டனில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆர் எஸ் எஸ் இந்தியாவின் தன்மையை மாற்றி வருவதாக குற்றம் சாட்டினார்.   அதே போல் கடந்த ஜூன் மாதம் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சிறப்புரை ஆற்ற ஆர் எஸ் எஸ் அழைத்த போதும் இதே போன்ற விமர்சனங்கள் எழுந்தன.

 

ஆர் எஸ் எஸ் மீது இது போன்ற விமர்சனங்கள் வைக்கும் போதெல்லாம் அந்த அமைப்பு ஒரு பொதுவான பதிலை அளித்து வருகிறது.   கடந்த 1962 ஆம் வருடம் நடந்த சீனப் போரில் அடிபட்ட போர் வீரர்களுக்கு அமைப்பின் தொடன்ர்கள் உதவியதில் அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு மிகவும்  மகிழ்ந்தார்.  அதை ஒட்டி கடந்த 1963 ஆம் வருடம் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் கலந்துக் கொள்ள பிரதமர் ஜவகர்லால் நேருவின் அழைத்தார்.   அவருடைய அழைப்பை ஏற்ற ஆர் எஸ் எஸ் அமைப்பினர் கலந்துக்கொண்டனர்” எனக் கூறி வருகிறது.

இது குறித்து விவரம் அறிய செய்தி ஊடகம் ஒன்று முயன்றுள்ளது.  உண்மையாகவே ஆர் எஸ் எ ச் தொண்டர்களை நேரு அழைத்தார என்பது குறித்த சந்தேகத்தினால் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சில கேள்விகளை அந்த ஊடகம் கேட்டுள்ளது.

1.      கடந்த 1962 ஆம் ஆண்டு சீனப்போரில் ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் உதவி புரிந்தனரா ?

2.      ஆர் எஸ் எஸ் அமைப்பு 1963 ஆம் வருட குடியரசு தின அணிவகுப்ப்பில் கலந்துக் கொள்ள அழைக்கப்பட்டதா?

3.      அந்த அணிவகுப்பில் ஆர் எஸ் எஸ் அமைப்பு கலந்துக்  கொள்ள யார் அழைப்பு விடுத்தது?

4.      அந்த அழைப்பு கடிதத்தின் பிரதியை அளிக்க முடியுமா?

என நான்கு கேள்விகளை ஊடகம் எழுப்பியது.

இதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம், “கடந்த 1963 ஆம் வருடம் நடந்த குடியரசு தின அணிவகுப்பு குறித்த எந்த ஒரு ஆவணமும் அரசிடம் இல்லை” என பதில் அளித்துள்ளது.