வாஷிங்டன்

மெரிக்கா அதிபர் தேர்தலில் முக்கிய மாகாணங்களில் டிரம்ப் மற்றும் பைடன் இடையே இன்னும் இழுபறி நிலவுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது.   இதில் டிரம்ப்பை விட மிகக் குறைந்த இடங்களில் பைடன் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளார்.  ஆயினும் சில முக்கிய மாகாணங்களில் முழுமையாக வாக்கு எண்ணிக்கை முடிவடையாததால் இழுபறி நிலவுகிறது.

தற்போதைய நிலையில் இருவருமே வெற்றிக்குத் தேவையான 270 என்னும் இலக்கை அடையவில்லை.  ஜார்ஜியா மற்றும் மிச்சிகன் தேர்தல் முடிவுகளை எதிர்த்து டிரம்ப் வழக்கு தொடர்ந்தார்.  இன்று அந்த வழக்குகளை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.  இந்த இரு மாநிலங்களிலும் டிரம்புக்கு அதிக அளவில் தோல்வி ஏற்பட்டுள்ளது.

இந்த தேர்தல் முடிவுகள் மூலம் அமெரிக்க அரசியலில் மாற்றம் காணப்படுவதாக பைடன் தெரிவித்துள்ளார்.  ஆனால் டிரம்ப் இன்னும் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளதாகவும் மக்கள் தமக்கு இரண்டாம் முறை அதிபராகும் வாய்ப்பை அளித்துள்ளதாகவும் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்  ஆனால் அவரால் அதை இதுவரை நிரூபிக்க முடியவில்லை.