முத்தையா முரளிதரன் பற்றி திரைப்படம் எடுப்பதில் என்னை பொறுத்தவரை எந்த தவறும் இல்லை : கார்த்தி சிதம்பரம்

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படமான 800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் எழுந்துவருகின்றன.

இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு கிளம்பியிருப்பது குறித்து கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார் . முத்தையா முரளிதரன் ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரர் . சர்வதேச அளவில் அதிக விக்கட்டுகளை வென்றுள்ளார் . அவரை பற்றி திரைப்படம் எடுப்பதில் என்னை பொறுத்தவரை எந்த தவறும் இல்லை என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார் .