இந்தியாவில் ஆர்எஸ்எஸ் என்ற என்ஜிஓக்கு மட்டுமே இடம்: ராகுல்காந்தி காட்டம்

டில்லி:

ந்தியாவில் ஆர்எஸ்எஸ் எனப்படும் அமைப்பு மட்டுமே என்ஜிஓ, புதிய இந்தியாவுக்க வரவேற்பு என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி காட்டமாக டிவிட் செய்துள்ளார்.

பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டமிட்டதாக வடமாநிலங்களை சேர்ந்த  இடதுசாரி சிந்தனையாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ராகுல்காந்தி, இந்த நாட்டில் ஆர்எஸ்எஸ் என்ற ஒரு என்ஜிஓ தவிர்த்து பிற என்ஜிஓக்கள் மூடப்பட வேண்டும் என்று மத்திய அரசு நினைக்கிறது என்று காட்டமாக கூறி உள்ளார்.

சமூக ஆர்வலர்களான சுதா பரத்வாஜ், கௌதம் நவ்லாகா, வரவர ராவ், அருண் ஃபெரைரா மற்றும் வெர்னன் கொன்சால்வஸ் ஆகியோர்  உபா சட்டத்தில்.கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டமிட்டதாகவும், அதுதொடர் பாக மகாராஷ்டி ராவில் கைப்பற்றப்பட்ட கடிதத்தை ஆதாரமாக கொண்டு, இந்த கைது நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் காவல்துறை தெரிவித்து உள்ளது.

உபா சட்டப்படி (Unlawful Activities Prevention Act) கைது செய்யப்படுபவர்கள், வாரண்ட் இல்லாமல் அவர்களுக்கு சொந்தமான இடங்களில்  ரெய்டு நடத்தவும், அவர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கைது செய்யவும். மேலும்,  கைது செய்யப்படுபவர்கள்  6 மாதங்கள் விசாரணையின்றி சிறையில் அடைக்க முடியும்.

இந்த சட்டப்படி சமூக ஆர்வலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டிருந்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் மத்தியஅரசின் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில்,  “ஆர்எஸ்எஸ் என்று அழைக்கப்படும் என்ஜிஓ-வுக்கு மட்டுமே இந்தியாவில் இடமுள்ளது. வேறு எல்லா என்ஜிஓ-க்களையும் மூடிவிடுங்கள். அனைத்து செயற்பாட்டாளர்களையும் சிறையிலடையுங்கள்…  புகார் செய்வோரை சுட்டுவிடுங்கள்….  புதிய இந்தியாவுக்கு வரவேற்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஆர்வலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அருந்ததிராய்,   இந்தியாவில் எமெர்ஜென்சி நிலை போன்ற சூழல் உருவாகியுள்ளது. கூட்டாக கொலை செய்வோர் கவுரவிக்கப்பட்டு, நீதி கேட்போர் கைது செய்யப்படுவதை வைத்து பார்க்கும்போது, நாடு எங்கே செல்கிறது என்பது புரிகிறது என்று கூறி உள்ளார்.