பொள்ளாச்சி வழக்கில் கண் துடைப்பு நாடகம் வேண்டாம் : ஸ்டாலின்

சென்னை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கண் துடைப்பு நாடகம் வேண்டாம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்கள் சிலர் சமூக வலை தளம் மூலம் பெண்களை வசப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளனர். அதன் பிறகு அதை காட்டி மிரட்டி பனம் பறித்துள்ளனர்.

இந்த விவகாரம் தற்போது வெளிவந்துள்ள நிலையில் இதில் பல அரசியல் புள்ளிகள் சம்மந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் இந்த தகவல்களை வெளியே சொல்லக் கூடாது என பாதிக்கப்பட்ட பெண்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் ஒரு கும்பல் மிரட்டி வருவதாக செய்திகள் வருகின்றன.

இந்த வழக்கு சிபிசிஐடியினரால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின், “பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கண் துடைப்பு நாடகம் வேண்டாம். நேர்மையான விசாரணை தேவை” என அறிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: No eye wash, Pollachi rape incident, Stalin statement
-=-