பொறாமை இருக்கும் இடத்தில் ஊழல் இருக்கும்: தமிழக அரசுமீது ஆளுநர் மறைமுக தாக்கு

சென்னை:

மிழக பல்கலைக்கழக துணைவேந்தர் நியமினத்தில் கோடிக்கணக்கில் பணம் புரண்டதாக தமிழக அரசு மீது குற்றச்சாட்டுக்களை கூறிய தமிழக ஆளுநர் பன்வாரிலால்,  பொறாமை இருக்கும் இடத்தில் ஊழல் இருக்கும் என்று மீண்டும் தமிழக அரசை மறைமுகமாக தாக்கி உள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழகம் முழுவதும் சென்று ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் சமீபதில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, தமிழக பல்கலைக்கழக வேந்தர்கள் பணி நியமனம்  விவகாரத்தில் கோடிக்கணக்கில் பணம் புரண்டதாகவும், தான் வந்தபிறகு அது நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் தமிழக அரசு மீது நேரடியாக குற்றம் சாட்டினார்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று நிகழ்ச்சி ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்களின் கூட்டமைப்பான உட்கல் அசோசியேஷன் ஆப் மெட்ராஸ் என்ற தனியார் அமைப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது, தமிழக அரசை மறைமுகமாக தாக்கி  பேசினார்.

நிகழ்ச்சியில் இந்தியில் பேசிய  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மனித நேயம் மற்றும் ஊழல் குறித்து பேசினார். ஜப்பான் நாட்டில் ஊழலே இல்லை என்று குறிப்பிட்ட அவர், பொறாமை இருக்கும் இடத்தில் ஊழல் இருக்கும் என்று மறைமுகமாக சாடினார். எளிமையாக வாழ்ந்தால், ஊழல் செய்ய வேண்டிய தேவை ஏற்படாது என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

சமீபகாலமாக தமிழக அரசில் துணைமுதல்வர் ஓபிஎஸ் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், கவர்னர் பன்வாரிலாலின் மறைமுக பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: There will be corruption in jealousy: Governor's indirect attack on the state government, பொறாமை இருக்கும் இடத்தில் ஊழல் இருக்கும்: தமிழக அரசுமீது ஆளுநர் மறைமுக தாக்கு
-=-