தெறியை முறியடித்த 24

a

சூர்யா, சமந்தா ஜோடியாக நடிக்க..  விக்ரம் குமார் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ’24’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும்  வரவேற்பை பெற்றுள்ளது.

சூர்யாவின் வில்லன் நடிப்பு,  சரண்யா பொன்வண்ணனின் பாசக்கார நடிப்பு, திருவின்  துல்லிய ஒளிப்பதிவு, ஏ.ஆர்.ரஹ்மானின் அதிரடி இசை ஆகியவை படத்திற்கு பெரும் ப்ளஸ்கள்.

தமிழகம் மட்டுமின்றி அமெரிக்காவிலும் தூள் கிளப்புகிறதாம் 24.   ஆமாம்..  அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் 270க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது இந்த படம்.   தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சேர்த்து மொத்தமாக $462,852 டாலர்களை வசூல் செய்திருக்கிறதாம்.

சூர்யாவின் படமொன்று வெளிநாடுகளில் இவ்வளவு வசூல் செய்வது இதுவே முதல்முறை. இதற்கு முன் விஜய்யின்  ‘தெறி’ படம் யு.எஸ் பாக்ஸ் ஆபீஸில் $440,000 டாலர்களை வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. அந்த சாதனையை தற்போது சூர்யாவின் ’24’ படம் முறியடித்துவிட்டதாம்.