சென்னை:

மிழகம் முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ள நிலையில், தமிழகம் உள்பட நாடு முழுவதும் வரலாறு காணாத அளவு வெயில் கொளுத்தி வருகிறது.  காலை 7 மணி முதலே வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் நண்பகல் நேரத்தில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சாலைகளில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். காலையிலேயே வெயில் சுட்டெரிக்க தொடங்கி விடுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஃபானி புயல்  கரை கடந்ததை அடுத்து தமிழகத்தில் காற்றில் உள்ள ஈரப்பதத்தை புயல் ஈர்த்து சென்று விட்டதால்,. ஈரப்பதம் அற்ற வரண்ட காற்று வீசக்கூடும் என்று தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என்று வானிலை மையைம் தெரிவித்து உள்ளது. மேலும்,  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.