தெர்மோகோல் ஐடியா ஒரு இஞ்சினீயருடையது – என்னுடையது இல்லை : செல்லூர் ராஜு

--

துரை

வைகை அணை நீர் வற்றாமல் இருக்க தெர்மோகோல் பரப்பியது ஒரு பொறியாளரின் யோசனை என தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு கூறி உள்ளார்.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு வைகை அணை நீர் வெயிலால் வற்றி விடுவதால் வெயில் தாக்காமல் இருக்க் அந்த நீர்பரப்பில் தெர்மோகோலை பரப்பினார்.    அடுத்த சில நொடிகளில் அந்த தெர்மோகோல் அனைத்தும் காற்று அடித்த்தும் பறந்து விட்டன.

இதை சமூக வலை தளங்களில் இன்றளவும் கேலி செய்து வருகின்றனர்.

தற்போது செல்லூர் ராஜு மதுரை மாவட்டத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.  அதை ஒட்டி பல இடங்களில் அவர் பொதுக்கூட்டங்கள் மற்றும் பல நிகழ்வுகளில் கலந்துக் கொண்டு உரையாற்றுகிறார்.

அவ்வகையில் அவர் மதுரையில் உரையாற்றிய போது, “மறைந்த முதல்வர் ஜெயலலிதா மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கொண்டு வந்து நீர் பற்றாக்குறையை போக்க முயன்றார்.   ஆனால் அதற்கு  பின் வந்த கருணாநிதி அந்த திட்டத்தை மக்களை சென்றடைய விடாமல் தடுத்து பாழாக்கினார்.

இன்று வரை என்னை சமூக வலை தளங்களில் நான் வைகை அணையில் தெர்மோகோல் பரப்பியதற்காக கிண்டல் செய்து வருகின்றனர்.

அது எனது யோசனை இல்லை.  ஒரு பொறியாளர் எனக்களித்த யோசனை ஆகும்.  அந்த பொறியாளரால் எனது பெயர் கெட்டுப் போனது” என தெரிவித்துள்ளார்.