பள்ளிகளில் தெர்மோகோல் உபயோகத்துக்கும் தடை: பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

சென்னை:

மிழகத்தில் ஜனவரி 1ந்தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப் பட்டுள்ள நிலையில், பள்ளிகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்துக்கு தடை விதிக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது.

மேலும், தெர்மோகோல் உபயோகத்துக்கும் தடை விதிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும்  சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதில்,  புத்தாண்டு முதல் பள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் தெர்மா கோல் உட்பட 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு  பள்ளிகள் பிளாஸ்டிக் பொருட்களை கட்டாயம் தவிர்க்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு உள்ளது.

குறிப்பாக பள்ளிகளில் மாணவர்கள் தங்களது படைப்புகள் மற்றும் செயல்முறை விளக்கங்களை காட்சிப்படுத்த பயன்படுத்தும் தெர்மாக்கோலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பைகள், ஸ்ட்ரா, உணவு அருந்தும் மேஜை மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள் உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் பிளாஸ்டிக் இல்லா சூழலை கொண்டு வர வேண்டுமெனவும் ஆசிரியர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.