பாட்னா :

பீகார் மாநிலத்தில் உள்ள  அரசு அலுவலகம் ஒன்றில் ஊழியர்கள் ஹெல்மட் அணிந்து பணிபுரிந்து வருகிறார்கள்.

பீகாரின் கிழக்கு சாம்பரன் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அரசு அலுவலகம் பாழடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.  கட்டிடம் இடிந்துவிழும் நிலையில் இருப்பதால், அலுவலகத்தின் மேற்கூரையிலிருந்து கற்கள் மற்றும் சிமெண்ட் ஸ்லாப்புகள் அவ்வப்போது பெயர்ந்து விழுவது வழக்கமாகிவிட்டது. இப்படி கற்கள் பெயர்ந்து விழுந்ததில் ஊழியர்கள் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது

இந்த கட்டடம் அபாயகரமானது என்று பீகார் மாநில பொதுப்பணித்துறை சென்ற வருடமே அறிவித்தது. ஆனாலும் இந்த அலுவலகம் சீரமைக்கப்படவில்லை. வேறு இடத்துக்கும் அலுவலகத்தை மாற்றவில்லை.

இதனால் உயிரைக் கையில் பிடித்தபடி பணியாற்றி வருகிறார்கள் ஊழியர்கள். மேலும், தங்களது தலையை பாதுக்காத்துக்கொள்ள அனைவரும் ஹெல்மட் அணிந்து அங்கு பணிபுரிந்து வருகிறார்கள்.