இந்த சேவைகளுக்கு ஆதார் எண் தேவையில்லை: உச்சநீதி மன்றம்

--

டில்லி:

னைத்து சேவைகளும் பெற ஆதார் காட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி வருகிறது.

இதில் தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 3 நீதிபதிகள், ஆதார் அடையாள அட்டை செல்லும் என தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

“ஆதார் இல்லை என்பதற்காக அடிப்படை உரிமைகள் மறுக்கப்படக்கூடாது “என்று தீர்ப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆதாரால் வரும் பாதகங்களை விட சாதகங்களே அதிகம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஆதார் எண் கேட்க கூடாது. 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் பள்ளி சேர்ப்புக்கு ஆதாரர் தேவையில்லை

நீட், சி.பி.எஸ்.இ. தேர்வுகளுக்கு ஆதார் எண் கட்டாயமில்லை. 

செல்போன் சிம்கார்டு பெற ஆதார் எண் கட்டாயமில்லை.

செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டிய அவசியமில்லை.

பெரு நிறுவனங்கள் ஆதார் தகவ்லகளை அரசிடம் கேட்கக்கூடாது

வங்கி கணக்கு தொடங்கவோ, படிப்பு விவகாரங்களுக்கோ ஆதார் கட்டாயமில்லை