விஜயகாந்த் வெளியில் நடமாட தடை கோரி வழக்கு?

விஜயகாந்த்
விஜயகாந்த்

“தே.மு.தி.க. தலைவரும்  முதல்வர் வேட்பாளருமான விஜயகாந்தை தனி அறையில் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்” என்று கோரி பொதுநல வழக்கு தொடர  சில அமைப்பினர் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்,  பொது இடங்களில் தனது கட்சி எம்.எல்.ஏ., கார் டிரைவர், பாதுகாவலர் உட்பட பலரையும் அடிப்பது, உதைப்பது,  அறைவது, கொட்டுவது என்று வித்தியாசமாக செயல்பட்டு வருகிறார்.  நேற்றுகூட தனது பாதுகாவலர் முதுகில காட்டமாக அறைந்துவிட்டார்.

“இப்படி திடீரென ஆத்திரத்துடன் செயல்படுவர் கையில் எதிர்பாராத விதமாக கட்டையோ, கம்பியோ எதிர்பாராத விதமாக கிடைத்துவிட்டால் பிறரது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும்.  ஆகவே உடனடியாக விஜயாந்தை தனிமையில் கண்காணிப்புடன் வைத்து, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். அவரது சிகிச்சை முடியும் வரை பொத இடங்களில் அவர் நடமாட தடை விதிக்க வேண்டும்  இதுவே பிறரது உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும்” என்று கோரி, உயர் நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடர சில அமைப்புகள் தயாராகி வருவதாக செய்திகள் பரவி வருகின்றன.

இன்னொரு புறம், “விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது. அவரால் பிறருக்கு ஆபத்து” என்று தேர்தல் கமிசனில் அளிக்கவும் வேறு சில அமைப்புகள் தயாராகி வருதாகவும் சொல்லப்படுகிறது.