தீவிரவாதிகளிடமிருந்து இந்திய மருத்துவர் இன்றுமீட்பு: பல மாதங்கள்  சிறையில் இருந்தவர்

திரிபோலி:

லிபியாவில் பயங்கவாதிகளின் பிடியிலிருந்து இன்று  இந்திய மருத்துவர் ராமமூர்த்தி மீட்கப்பட்டார். பல மாதங்களாக  ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த ராமமூர்த்தி இன்று . விடுதலையானதும் அவர்  செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறியது: “அவர்கள் அனைவரும் நன்கு படித்த இளைஞர்களாக இருக்கின்றனர். ஒருநாள் என்னை காயம்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வலியுறுத்தினர். ஆனால் நான் செய்யவில்லை. அதற்கு அவர்கள் கடுமையாக திட்டினார்கள்” என்று கூறினார்.

தீவிரவாதிகள்,ஈராக், நைஜீரியா, சிரியா உள்ளிட்ட நாடுகளில் செய்திருக்கும் அநியாயங்களை பார்க்கச்சொல்லி வலியுறுத்தினர் என்றும், அது பார்க்கவே முடியாத அளவுக்குக் கொடுமையாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அந்த தீவிரவாதிகள், இஸ்லாத்தை பற்றியும், ஐந்துமுறை தொழுவது எப்படி, தொழுகைக்கு முன் உடலை எப்படி சுத்தம்  செய்துகொள்வது, ஐஎஸ் அமைப்பின் சட்டவிதிகள் என்ன என்பது பற்றி தங்களுக்கு வகுப்பு எடுத்தனர் என்று  ராமமூர்த்தி தெரிவித்தார்.

“கடந்தாண்டு ரம்ஜான் நேரத்தில் என்னை அணுகி காயம்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் தேவை  என்றனர். அதற்கு நான், அறுவை சிகிச்சை செய்ய தெரியாது என்றேன். அதன்பிறகும் அவர்கள் என்னை சிர்டி நகர மருத்துவமனை மருத்துவராக நியமித்தனர்” என்று ராமமூர்த்தி கூறினார். மேலும்  “அவர்கள் முகாமில் நான் இருந்தபோது 10 நாளில் மூன்றுமுறை என்னை துப்பாக்கியால் சுட்டனர்” என்று அவர் கூறினார்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி ஐ எஸ் பயங்கரவாதிகளால் கடந்த 18 மாதங்களுக்குமுன் லிபியாவில் கடத்தப்பட்டார். மத்திய அரசின் தீவிர முயற்சிக்குப் பின் இன்று விடுதலை செய்யப்பட்டார். அதற்காக அவர் பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோருக்கு  நன்றி தெரிவித்தார். விரைவில் மருத்துவர் ராமமூர்த்தி இந்தியாவுக்கு கொண்டுவரப்படுவார் என அமைச்சர் சுஸ்மா கூறியுள்ளார்.