சென்னை:

கோயம்பேடு காய்கறி சந்தை நாளை செயல்படும் என அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.  இது சென்னை மாநகர மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த 24ந்தேதி  நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. மேலும், வியாபாரிகள் கூட்டமாக செல்லக்கூடாது இடைவெளி விட்டு செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

ஆனால், அரசின் உத்தரவுகளையும், நெறிமுறைகளையும் கடைபிடிக்காமல், வியாபாரிகள் எந்தவித பாதுகாப்பும் இன்றி காய்களை விற்பனை செய்து வருகின்றனர். பொதுமக்களும் அங்கும் காய்கறிகளை வாங்கி கூடியதால் சலசலப்பு ஏற்பட்டது.  இது கொரோனா தொற்று பரவ வாய்ப்பாகி விடும் சமூக ஆர்வலர்களும், மருத்துவ துறையினரும் பதற்றம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டை தற்காலிகமாக மூட தமிழகஅரசு கூறியது.  நாளை மற்றும் நாளை மறுநாள் கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அளிப்பதாக வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்தனர்.

ஆனால், தற்போது, மக்களின் அத்தியாவசியத் தேவையைக் கருதி, விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும், இதனால் நாளையும், நாளை மறு நாளும் கோயம்பேடு மார்க்கெட் செயல்படும் என அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இது மக்களிடையே பரபரப்யையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மத்திய மாநில அரசுகள் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் சமூக விலகல் கடைபிடிக்க வேண்டும் என்றும் கடந்த 15 நாட்களாகவே கதறி வரும் நிலையில், வணிகர்களோ தங்களது வணிக்கத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்று சமூக வலைதளங்களிள்ல நெட்டிசன்கள் கண்டித்து வருகின்றனர்.

இவர்கள் திருந்தமாட்டார்கள்….

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாமும் மத்திய மாநில அரசோடு இணைந்து, வீட்டைவிட்டு வெளியே செல்வதை தவிர்ப்போம்… கொரோனா வைரஸ் கோரப் பிடியில்  இருந்து நம்மை  பாதுகாப்போம்…