மும்பையில் ஓலா டிரைவரிடம் திருடிய பலே திருடன் கைது!

மும்பை,

லா கார் புக் செய்வதாக கூறி, டிரைவரிடம் இருந்து பணம்  மற்றும் போனை திருட்டி செல்லும் பலே திருடன் கைது செய்யப்பட்டான்.

ஓலா காரில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கார் புக்செய்துகொண்டு போகும்போது, கார் டிரைவரிடம் இருந்து போன் மற்றும் பணம் நூதன முறையில் கொள்ளையடித்து வந்த இளைஞன் கைது செய்யப்பட்டான்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, தீபக் திவாரி என்ற 20 வயதுடைய இளைஞர் தெற்கு மும்பையில் இருந்து, சியான் பகுதிக்கு கார் புக் செய்துள்ளார்.

காரை பரூக் சேக் என்ற டிரைவர் ஓட்டிச்சென்றார். காரில் பயணம் செய்யும்போது, இடையே திவாரியின் இரண்டு நண்பர்கள் காரில் ஏறினர்.

காரில் போய்க்கொண்டிருக்கும்போதே, நண்பர்களுக்கு ரூ.2000 கடன் கொடுக்க வேண்டும், உங்களிடம் பணம் இருந்தால் கொடுங்கள், அருகே உள்ள ஏடிஎம்-ல் பணம் எடுத்து தருகிறேன் என்று கூறியுள்ளார்.

திவாரியின் பேச்சில் நம்பிய சேக், தன்னிடம் இருந்த ரூ.1800ஐ திவாரியிடம் கொடுத்துள்ளார். அதை தனது நண்பர்களுக்கு கொடுத்த திவாரி,  ஏடிஎம் அருகே காரை நிறுத்திச்சொல்லி, டிரை வரிடம் இருந்த போனை வாங்கிக்கொண்டு எஸ்கேப்பாகி விட்டார்.

போன் மற்றும் பணத்துடன் தப்பியோடிய தீபக் திவாரி மும்பை டிவா ரெசிடன்ட் பகுதியை சேர்ந்தவர் என்பது அவர் கார் புக் செய்யும்போது தெரிய வந்தது.

இந்நிலையில் மறுநாளும், தீபக் வேறொரு இடத்துக்கு செல்வராக ஓலா கார் புக் செய்துள்ளார். அப்போது புக் செய்த போனின் எண்ணை கண்ட, சந்தானா பாஷா என்ற டிரைவர்.. இந்த எண் தனது பக்கத்து வீட்டு நண்பர் சேக்- நண்பராச்சே என்று சந்தேகம் கொண்டு, அவரிடம் விசாரித்துள்ளார்.

அப்போதுதான், சேக், தனது போன் மற்றும் பணம் திருடு போனது குறித்து பாஷாவிடம் கூறினார்.

இதனால் உஷார் அடைந்த பாஷா, சேக்-ஐ போலீஸ் நிலையத்திற்கு வரச்சொல்லி,  திருடன் திவாரியை பிடிக்க திட்டம் தீட்டினார்.

அதையடுத்து, கார் புக் செய்த திவாரியை காரில் ஏற்றிக்கொண்டு அருகிலுள்ள  காந்திவாலி நகரின் சமடா நகர் பொலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

போலீசாரி தீபக் திவாரியை பின்னர் அங்கிருந்து சீயான் பகுதி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், தீபக் இதுபோன்று பல டிரைவர்களிடம் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. அவரிடம் இருந்து

 

இதுகுறித்து சீயான் பகுதி போலீசார் கூறியதாவது. பல சிம்கார்டுகள், போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.