ஹரியானா மாநிலம் ஜிந்த் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த 182 கோவிஷீல்ட் மற்றும் 440 கோவாக்சின் தடுப்பூசி மருந்தை யாரோ திருடிச் சென்று விட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த மருந்து குடுவைகள் அனைத்தும் ஒரு பாலிதீன் பையில் போட்டு ஜிந்த் காவல்நிலையத்தின் வெளியே யாரோ விட்டுச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து அந்த காவல் நிலைய காவலர்கள் கூறுகையில் இதை திருடிய நபர் இது தடுப்பூசி என்பது தெரியாமல் எடுத்து சென்றதாக எழுதி இந்த பையுடன் இங்கு வைத்துவிட்டு சென்றுள்ளான் என்று கூறியுள்ளனர்.

மருத்துவமனையில் மருந்து குடுவைகள் கையாள வேண்டிய விதிமுறைகள் தெளிவாக உள்ளபோதும் இப்படி பாலிதீன் பையில் இத்தனை குடுவைகளையும் போட்டு அது யாருக்கும் பயன்படாத வகையில் மருத்துவமனையில் வைத்திருந்தவர்கள் யார் என்பது குறித்து இப்போது விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது.

உரிய குளிர்பதன பாதுகாப்புடன் வைக்கப்பட்ருந்தால் இவை மொத்தத்தையும் மருத்துவமனையில் இருந்து ஒருவர் தூக்கிக்கொண்டு செல்லும் வரை மருத்துவமனை ஊழியர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

கொரோனா பாதிப்பால் நாடு முழுதும் லட்சகணக்கானோர் பாதிக்கப்பட்டு தினமும் ஆயிரக்கணக்கானோர் உயாரிழந்து வரும் நிலையில், மருந்து தட்டுப்பாடு, தடுப்பூசி விலையேற்றம், ஆக்சிஜன் மடைமாற்றம், ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி திருட்டு என்று தினமும் பல்வேறு சம்பவங்களும் அரங்கேறி வருவது நிர்வாக சீர்கேட்டை பரைசாற்றுவதாக உள்ளது என்று பலரும் கூறிவருகின்றனர்.