சென்னை

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் உண்டியலில் ஒரு ரூபாய் காணிக்கை செலுத்தி விட்டு உண்டியல் பணம் முழுவதையும் ஒருவன் திருடிச் சென்றுள்ளான்

 

சென்னையில் திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவில் மிகவும் புகழ்வாய்ந்த சிவன் கோவில் ஆகும்.   கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 6 மாதங்களுக்கும் மேல் கோவில் பூட்டியே உள்ளது.  பக்தர்கள் யாரும் வராத நிலையில்  அரசின் உத்தரவுப்படி அர்ச்சகர்கள் கோவிலில் முறைப்படி பூசை நடத்தி விட்டு  நடையை சாத்திவிடு சென்று விடுவார்கள்


 

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு இந்தக் கோவிலில் உள்ள இரு உண்டியலும் உடைக்கப்பட்டு திருட்டு நடந்துள்ளது.   இதையொட்டி அர்ச்சகர்கள் காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.  இதன் அடிப்படையில் கோவிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  கோவில் அர்ச்சகர்கள் இதைப் பார்த்துச் சிரித்து விட்டனர்.

 

ஏனென்றால் அந்த திருடன் திருடுவதற்கு முன்பு ஒரு ரூபாயை கடவுளுக்கு உண்டியலில் காணிக்கை செலுத்தி உள்ளான்.  அதன் பிறகு முழு உண்டியல் பணத்தையும் கொள்ளை அடித்துள்ளான்.  இதை சிசிடிவி காமிரா காட்சியில் பார்த்ததால் அர்ச்சகர்கள் சிரித்துள்ளனர்.  இரு உண்டியலிலும் இருந்த சுமார் ரூ.1 லட்சத்தையும் திருட அந்த திருடன் ரூ.1 லஞ்சம் கொடுத்தது அனைவருக்கும் நகைப்பை ஏற்படுத்தி உள்ளது.