Random image

நிஜாம் மியூசியத்தில் திருடுப் போன தங்க டிபன் பாக்ஸில் தினமும் உணவு சாப்பிட்டு வந்த திருடர்கள்

ஹைதரபாத் நிஜாம் மியூசியத்தில் திருடப்பட்ட டிபன் பாக்சில் தினமும் உணவு சாப்பிட்டு வந்ததாக அதனை திருடியவர்கள் தெரிவித்துள்ளனர். தங்க டிபன் பாக்ஸ் திருடிய நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

gold

சில நாட்களுக்கு முன்னர் ஹைதரபாத்தில் உள்ள நிஜாம் மியூசியத்தில் இருந்து 4 கிலோ எடைக் கொண்ட டிபன் பாக்ஸ் திருடு போனது. முழுவதும் தங்கத்தால் ஆன அந்த டிபன் பாக்ஸ் மரகதம், மாணிகள் மற்றும் பவளங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதன் சந்தை மதிப்பு 30 முதல் 40 கோடி வரை விலைப் போகவல்லது.

இந்நிலையில் மியூசியத்தில் இருந்து தங்க டிபன் பாக்ஸ் திருடு போனது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து வந்தனர். கிட்டத்தட்ட 22 போலீசார் குழு டிபன் பாக்ஸ் திருடு குறித்து விசாரணை மேற்கொண்டது. அப்பகுதியில் உள்ள ரயில் நிலையங்கள், செல்போன்களை கண்காணிக்கப்பட்டன. 300 டவர்களின் சிக்னல்கள் கண்காணிக்கப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

இதையடுத்து, ஜஹீராபாத் மாவட்டத்தில் சந்தேகத்திற்கிடமான இரு பைக்குகளை போலீசார் கைப்பற்றினர். அதனை ஆராய்ந்ததில் இருவர் நட்சத்திர விடுதியில் தங்கி இருந்தது தெரியவந்தது. அவர்களை விசாரணை மேற்கொண்டதில் கைது செய்யப்பட்டவர்கள் நிஜாம் மியூசியத்தில் காணாமல் போன தங்க டிபன் பாக்ஸை திருடியவர்கள் என்றும், அவர்கள் தினமும் தங்க டிபன் பாக்ஸில் உணவு உண்டு வந்ததாக தெரிய வந்தது.

இதையடுத்து, அவர்களிடம் இருந்து தங்க டிபன் பாக்ஸ் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இருவரும் விசாரணைக்காக ஹைதரபாத்திற்கு கொண்டுவரப்பட்டனர்.