சிவராத்திரி – ராசிகளும் அபிஷேக பொருட்களும்

சிவராத்திரி – ராசிகளும் அபிஷேக பொருட்களும்

சிவராத்திரியன்று, எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தப்பொருளைக் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

மேஷம் – வெல்லம் கலந்த நீர் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

ரிஷபம் – இந்த ராசிக்காரர்கள் தயிர் கொண்டு அபிஷேகம் செய்தால் பணப் பிரச்சனைகளா நீங்கும்.

மிதுனம் – சிவ லிங்கத்திற்குக் கரும்புச் சாறு கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

கடகம் – சர்க்கரை சேர்த்த பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். மந்தாரைப் பூ கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.

சிம்மம் – பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

கன்னி – இந்த ராசிக்காரர்கள் பால் நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

துலாம் – பசும் பாலால் இந்த ராசிக்காரர்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

விருச்சிகம் – இந்த ராசிக்காரர்கள் தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரால் அபிஷேகம் செய்யலாம்.

தனுசு – இந்த ராசிக்காரர்கள் குங்குமப்பூ கலந்த பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

மகரம் – இந்த ராசிக்காரர்கள் சிவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வில்வம் பழத்தைப் படைக்க வேண்டும்.

கும்பம் – இளநீர் அல்லது கடுகு எண்ணெய்யால் இந்த ராசிக்காரர்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

மீனம் – குங்குமப்பூ பாலால் இந்த ராசிக்காரர்கள் சிவனுக்குப் பால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
சிவாய நம என சிந்தித்து இருப்போருக்கு அபாயம் ஒரு நாளும் இல்லை

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Abhishekam, Patrikaidotcom, rasi, Shiv rthrri, tamil news, அபிஷேகம், சிவராத்திரி, ராசி
-=-