மூன்றாம் அணி – பாஜகவிற்கு மறைமுக உதவி செய்யும்- ப.சிதம்பரம் விமர்சனம்

சிவகங்கை:
மூன்றாம் அணி பாஜகவிற்கு மறைமுக உதவி செய்யும் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பாஜக தேர்தலில் வெற்றி தோல்வியை சந்திக்காமல், முடிவை திருடும் செயலில் ஈடுபட்டு வருகிறது என்றும், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும், எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கலாம் என்று நினைத்தால், மக்கள் கொந்தளிபார்கள் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இது தமிழ்நாடு, கோவா, மணிப்பூர் இல்லை அதனால், பாஜக நினைப்பது நடக்காது என்று தெரிவித்தார். மூன்றாம் அணி அமைப்பவர்கள் எல்லோரும் பாஜகவுக்கு மறைமுக ஆதரவு அளித்து வருகின்றனர் என்றும் அவர் விமர்சித்தார். இதை அவர்கள் விரும்பு செய்கிறார்களா? அல்லது விரும்பாமல் செய்கிறார்களா என்று தெரியவில்லை. இருப்பினும் இது மறைமுகமாக பாஜக அணிக்கு தான் செல்லும் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்