திருச்செந்தூர் கோவில் பிரகார மண்டம் இடிந்து விபத்து: பெண் பலி

திருச்செந்தூர்,

றுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில் உள்ள பிரகார மண்டபம் திடீரென இடிந்து விழுந்தது.

வள்ளிக்குகை அருகே உள்ள 60 ஆண்டு பழமையான இந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

தற்போது கார்த்திகை மாதத்தின் இறுதி நேரம்  என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. ஏராளமான  ஐயப்பத பக்தர்களும் வந்துபோகின்றனர்.

இன்று வியாழக்கிழமை மற்றும் காலை நேரம் என்பதால் பக்தர்கள் கூட்டம் குறைவு என்றும் தகவல்கள் கூறுகிறது.

மேலும், கோவில் வளாகத்தில் பக்தை ஒருவர் பலியானதால், கோவிலில் நடை உடடினயாக அடைக்கப்பட்டது.