சமூகவலைத்தளத்தில் ‘திருடன் போலீஸ்’ இயக்குனர் பகிர்ந்த நினைவலைகள்….!

திருடன் போலீஸ், உள்குத்து, கண்ணாடி போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு தனது முதல் படமான திருடன் போலீஸ் படத்திலிருந்து சில படங்களை தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தன்னை ஒரு படம் தயாரிக்க நம்பியதற்காக தனது தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.தினேஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பை நினைவு கூர்ந்தார்.

முதல் படம் எப்போதும் சிறப்பு வாய்ந்தது என கூறிய அவர் என் நண்பர் செல்வகுமார், கெனன்யா பிலிம்ஸ் க்கு என்னை நம்பியதற்கு நன்றி என தெரிவித்துள்ளார் .

கெனன்யா பிலிம்ஸ் தயாரித்த இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ளார். பாலா சரவணன், நிதின் சத்யா மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார் .