உலகளந்த பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று.
இது தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் நகரில் உள்ளது.
இக்கோயிலின் பெருமாள் திருவுரு ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கின்றார். கோபுர நுழைவாயில்கள் கோயிலை ஒட்டி இல்லாமல், கோயிலை ஒட்டிய தெருக்களின் நுழைவாயில்களாக உள்ளன.
‘அன்பே தகளியாக;
ஆர்வமே நெய்யாக’
என்ற பெரியாழ்வாரின் பாடல் பெற்ற தலம், திருக்கோயிலூர். முதலாழ்வார் மூவர் உலகளந்த பெருமாளைப் பாடிப் பரவியுள்ளனர். இங்குப் பெருமாளுடன் புஷ்பவல்லித் தாயாரும் கோயில் கொண்டுள்ளார். உற்சவர் தேகலீச பெருமாள்.

இது தவிர மற்றொரு சுற்றுலாத் தலமும் இருக்கிறது. பெண்ணையாற்றின் நடுவே உள்ள கபிலர் குன்றில் சங்க இலக்கியக் கவிஞர் கபிலர் கடைசிக் காலத்தில் தங்கியிருந்ததாகச் சொல்லப்படு கிறது. மாநில தொல்பொருள் ஆய்வுத் துறையினரின் பாதுகாப்பில் இக்கோயில் இருக்கிறது.
தீர்த்தம் பொன்னைஆறு கிருஷ்ணாதீர்த்தம் ஸ்ரீசக்கரதீர்த்தம்
பெருமாளின் மங்களா சாசனம்  பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 43-வது திவ்ய தேசம் .
இங்கு விஷ்ணுவும் துர்க்கையும் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கின்றனர், மூலவரின் திருமேனி தாருவால் (மரம்) ஆனது இவ்வளவு பெரிய பெருமாள் கோவில் வேறு எங்கும் கிடையாது. சாளகிரமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் உள்ளார், தமிழகத்தில் இது 3-வது பெரிய கோபுரம் ஆகும்

5-ஏக்கர் பரப்பளவில் உள்ளது, ராஜகோபுரம் 192-அடி உயரம் கொண்டது  11 நிலைகளை கொண்டது முதல் இடம் ஸ்ரீரங்கம் 2-வது ஸ்ரீவில்லிபுதூர் 3-வது உலகளர்ந்த பெருமாள் கோவில் ஆகும். இத்தலத்தை நடுநாட்டு திருப்பதி என்று கூறுகின்றனர்,இங்கு தல விருச்சமாக புன்னை மரம்.
மகாபலி சக்கரவர்த்தி:
அசுர குலத்தில் பிறந்திருந்த  மகாபலி சக்கர வர்த்தி சிறப்பாக நல்லாட்சியை புரிந்து கொண்டி ருந்தான். மகாபலி தனது முன்பிறவியில் எலியாக இருந்தான். அப்போது சிவன் கோவில் ஒன்றில் விளக்கு அணையும் நிலையில் இருந்தது. அப்போது அங்கு வந்த ஒரு எலியின் மூக்கு நுனியால் விளக்கு திரி தூண்டப்பட்டது, விளக்கு பிரகாசமாக எரியத் தொடங்கியது. தன்னையும் அறியாமல் நற்காரியம் செய்த அந்த எலியை, மறு பிறவியில் நாடு போற்றும் சக்கரவர்த்தி யாக பிறக்க அருள்புரிந்தார் சிவபெருமான்.
இந்த் எலிதான் மகாபலி சக்கரவர்த்தியாக பிறப்பெடுத்தது. அவன் தன் நாட்டு மக்களுக்கு செய்த நற்காரியங்கள், அவனை மிகுந்த புகழ் அடையச் செய்திருந்தது. இந்த நிலையில் நாட்டின் நலன் கருதி வேள்வி ஒன்றை நடத்த முன்வந்தான் மகாபலி சக்கரவர்த்தி.  இதைக் கேள்விப்பட்ட தேவர்கள் கலங்கிப் போனார்கள்.
ஏராளமான புண்ணிய காரியங்கள் செய்திருந்தான் அவன்.  இப்போது, இந்த வேள்வியையும் முடித்து விட்டால், அசுரகுலத்தைச் சேர்ந்த அவன் இந்திரப்பதவியை அடைந்துவிடக்கூடும் என்று அவர்கள் பயந்தனர். அதனைத் தடுத்தருளும்படி மகா விஷ்ணுவிடம் போய் மன்றாடினர்.
இதனால் தேவர்களான எங்களுக்கு பெரும் ஆபத்து வரலாம். எனவே அவனது வேள்வியை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று வேண்டினர். ‘சிறப்பான ஆட்சியை வழங்கிக் கொண்டிருக்கும் மகாபலி யைப் பார்த்து, இந்த தேவர்களுக்கு மிகுந்த பொறாமை. அவனால் இவர்களுக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்று என்னிடமே வந்து நிற்கிறார்கள்’ என்று எண்ணிக் கொண்டார் மகாவிஷ்ணு. இருப்பினும் தேவர்களை காப்பது தன் கடமை என்பதால் அவர்களுக்கு உதவ முன் வந்தார்.  அதே நேரத்தில் மகாபலியின் சிறப்பை உலகம் அறியச் செய்யவும் அவர் சித்தம் கொண்டார்.

அதற்காக வாமன (குள்ளமான) அவதாரம் எடுத்தார் மகாவிஷ்ணு. 3 அடி உயரமே கொண்ட அவர், ஒரு கையில் தாழம்பூ குடையும், மற்றொரு கையில் கமண்டலம் கொண்டு மகாபலி நடத்தும் வேள்வி சாலைக்குச் சென்றார். அவரை வரவேற்ற மகாபலி, தானம் வழங்க முற்பட்டான்.
ஆனால் வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை அசுர குல குருவான சுக்ராச்சாரியார் அறிந்து கொண்டார். அவர் மகாபலியிடம், ‘மகாபலி! வந்திருக்கும் அந்தணரின் மேல் எனக்கு சந்தேகமாக உள்ளது. அவர் திருமாலின் அவதாரமாக இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. எனவே தானம் கொடுப்பதில் அவசரம் வேண்டாம்’ என்று  கூறினாரோ இல்லையோ!
மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது  மகாபலிக்கு. ‘குருவே! என்னிடம் தானம் பெற வந்திருப்பது திருமாலின் அவதாரமா.. ஆஹா,.. இதைவிட பெரிய பேறு எனக்கு  என்ன இருக்கப் போகிறது!’ என்று கூறியவன், அத்துடன் நில்லாமல், கமண்டலத்தை எடுத்து நீர் வார்த்து தானத்தைக் கொடுக்க முன்வந்தான்.
இனி அவனை தடுக்க முடியாது என்பது சுக்ராச்சாரியாருக்கு நன்கு புரிந்துவிட்டது. ஒரு  தும்பி  (வண்டு)யின் உருவம் கொண்டு கமண்டலத்திற்குள் புகுந்து நீர் வரும் வழியை அடைத்துவிட்டார்.
உலகளந்த பெருமாள்:
இதை பார்த்த வாமனர், தர்ப்பைப் புல் ஒன்றை எடுத்து நீரை அடைத்திருந்த  வண்டை நோக்கி குத்தினார். இதில் சுக்ராச்சாரியாரின் கண் பார்வை பறி போனது. (இப்போதும் சுக்கிரன் அதாவது வீனஸுக்கு ஒரே கண்தான்)
மூன்றடி மண் வேண்டும் என்று கேட்டார் வாமனர்.
மகாபலி சக்கரவர்த்தி நீர் வார்த்து தானத்தை கொடுத்தான். பின்னர் தங்களுக்கு உரிய நிலத்தை அளந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று  வாமனரை நோக்கி கூறினான். இதற்காகவே காத்திருந்த வாமனர், குள்ள உருவில் இருந்து வானுயரத் திற்கு உயர்ந்தார். இதைப் பார்த்து ஆச்சரியத்தில் மலைத்துப் போய் நின் றான் மகாபலி சக்கரவர்த்தி. உயர்ந்து நின்ற வாமனர் முதல் அடியைக்  கொண்டு மண்ணுலகையும், இரண்டாம் அடியாக விண்ணுலகையும் அளந்து  முடித்தார். பின்னர் மகாபலியிடம், ‘சக்கரவர்த்தியே! நான் இரு உலகங்களையும் இரண்டு அடியில் அளந்து விட்டேன். மூன்றாவது அடியை எங்கே வைப்பது’ என்று கேட்டார். ‘இறைவா! மூன்றாவது அடியை என் தலை மீது வையுங்கள்’ என்று நிலத்தில் மண்டியிட்டு அமர்ந்து சிரம் தாழ்த்தி இருந்தான். மகாவிஷ்ணு வும் தனது மூன்றாவது அடியை மகாபலியின் தலைமீது வைத்து அவனை பாதாள உலகத்திற்கு தள்ளினார்,
‘மகாபலியே! உன் நல்லாட்சியால் உன் நாட்டை வளம் பெறச்  செய்தாய். அதனால் நீ பெற்ற புண்ணியம் அனைத்தும் உனக்கு உயர்வைத் தந்தது. இப்போது நீ எனக்கு வழங்கிய தானத்தினால், இந்த உலகமே போற்றும் அளவுக்கு சிறப்புற்று இருப்பாய்’ என்று அருளினார், பாதாளத்திற்கு சென்ற மகாபலி சக்கரவர்த்தி, ‘திருமாலே! நான் என் நாட்டின் மீதும், நாட்டு மக்களின் மீதும் மிகுந்த பற்று வைத்திருக்கிறேன். அதைத் தாங்களும் அறிவீர்கள். எனவே வருடத்திற்கு ஒரு முறை மட்டும் நான் என் நாட்டிற்கு வந்து என் மக்களின் சிறந்த வாழ்க்கையை பார்க்க அனுமதிக்க வேண்டுகிறேன்’ என்றான்.
3030
அப்படியே ஆகட்டும்’ என்று ஒப்புதல் அளித்தார் மகாவிஷ்ணு :
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத் திருநாள் அன்று மகாபலி சக்கரவர்த்தி தன்னுடைய நாட்டையும், நாட்டு மக்களையும் பார்ப்பதற்காக வருகிறார். அவரை வரவேற்கும் விதமாகவே கேரள மக்கள் 10 நாட்கள் திருவிழாவாக ஓணம் பண்டிகையை நடத்துகின்றனர்.
இக்கோயிலுக்கு வந்து  சேவித்தால் தோஷங்கள் நிவர்த்தியாகும், திருமணம் நிச்சயமாகும். கல்வி விருத்தியடையும்.