நெட்டிசன்:

Esan D Ezhil Vizhiyan முகநூல் பதிவு

சேலம் நாமமலையில் திருமண் ( நாமம்) புதுப்பிக்கும் வைபவம்.. இன்று நடைபெறுகிறது..!

சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள பிரசித்திபெற்ற நாமமலையில் மலையில் வரையப்பட்டுள்ள மிகப்பெரிய திருமண் ( நாமம்)ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமை சுண்ணாம்பு, வர்ணம் தீட்டி புதுப்பிக்கப்படும்…!

இந்த திருமண் புதுப்பிக்கும் கைகர்யம் சேலம் பொன்னம்மாபேட்டை புட்டா நாகைய்யர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீபத்மசாலியர் குல ஸ்ரீபத்ராவதி ஸ்ரீபிரசன்னாவதி சமேத ஸ்ரீபாவநாராயண சுவாமி திருக்கோவில் சார்பாக பாரம்பரியமாக செய்யப்படுவது வழக்கம்..!

இதற்காக இன்று புரட்டாசி 3வது சனிக்கிழமை ஸ்ரீபாவநாரயண சுவாமி உற்சவர் சிறப்பு அலங்காரத் தில் வாகன புறப்பாடு ஆகி அம்மாபேட்டை மெயின் ரோடு ,முக்கிய வீதிகள் வழியாக திருவீதியுலா வந்து நாம மலைஅடிவாரத்தை அடைவார்..!

அதற்கு முன்பாக மலையடிவாரத்தில் உள்ள நாடார் சமூகத்தில் பரம்பரையாக மலையேறி நாமத்துக்கு வர்ணம் தீட்டும் குடும்பம் ,ஸ்ரீபாவநாராயண சுவாமி கோயில் சார்பாக வழங்கப்பட்ட சுண்ணாம்பு உள்ளிட்ட நாமம் புதுப்பிக்கும் பொருட்களை பெற்றுக் கொண்டு மலையேறி சென்று நாமத்தை புதுப்பித்து வைத்திருப்பார்கள்..!

ஸ்ரீபாவநாராயண சுவாமி மலையடிவாரம் வந்த பின்பு திருமண் புதுப்பிக்கும் வைபத்திற்கான சிறப்பு பூஜைகள் நடைபெறும்…! பின்னர் அங்குள்ள பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்…!

பழங்காலம் தொட்டு நடந்து வரும் இந்த நாம மலை திருமண் புதுப்பிக்கும் வைபவம் இன்றும் தற்போது சிறப்பாக தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது..!

சேலம் நாம மலை சேலத்தின் அடையாளங்களில் ஒன்றாகும்..! கட்டிடங்கள் அவ்வளவாக இல்லாத அந்த காலத்தில் சேலம் டவுனில் எங்கிருந்து பார்த்தாலும் நாமம் தெரிவது தனிஅழகாகும்…!

நாம மலை அடிவாரத்தில் ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள் கோவிலும், மலை மேல் ஸ்ரீசீனிவாச பெருமாள் கோவிலும் உள்ளன…!

புரட்டாசி சனிக்கிழமைகளில் குறிப்பாக 3வது சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாமமலையில் குவிவது வழக்கம்…!

தற்போது மலையடிவாரத்தில் வெகுவிமரிசையாக அன்னதானங்கள் வழங்கி வருகிறார்கள்…!
நாமமலை, சுத்தமான காற்று வீசும் மரங்கள் சூழ்த்த பசுமையான இடம்..!

ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள், ஸ்ரீசீனிவாசபெருமாள் பெருமாள் என பழமையான பெருமாள் கோவில்கள், மலையில் வரையப்பட்ட பெரிய திருமண், அங்குங்மிங்கும் துள்ளி விளையாடும் வானரங்கள் என இப்பகுதியே தெய்வீக தன்மையோடு திகழ்கிறது..!

இதிலும் சேலம் பொன்னம்மாபேட்டை ஸ்ரீபாவநாராயண சுவாமி, ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமை ,பொன்னம்மாபேட்டையில் இருந்து புறப்பட்டு சென்று நாமத்தை புதுப்பித்து தரும் பாரம்பரிய நிகழ்வு ஒரு பக்தி பரவசமான வைபவமாகும்…!

சேலம் அம்மாபேட்டை நாமமலையில் உள்ள நாமத்தை புதுப்பிக்கும் வைபவத்திற்காக ,பொன்னம்மாபேட்டையிலிந்து ஸ்ரீபாவநாராயண பெருமாள் புறப்பாடு ஆகி முக்கிய வீதிகள் வழியாக சென்றார்..!

வழியெங்கும் பக்தர்கள் பெருமாளை தரிசித்து வழிபட்டனர்…!

ஓம் நமோ நாராயணாய…! கோவிந்தா…! கோவிந்தா..!