காஷ்மீர் கல்வீச்சில் தமிழர் பலி….மத்திய, மாநில அரசுகள் மீது தந்தை குற்றச்சாட்டு

ஸ்ரீநகர்;

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக ஒரு கும்பல் தொடர்ந்து கல்வீச்சில் ஈடுபட்டு வருகிறது. இந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு நடந்த கல்வீச்சில் சுற்றுலா சென்ற சென்னையை சேர்ந்த திருமணி என்பவர் உயிரிழந்தார். அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டது.

இந்நிலையில், திருமணி தந்தை கூறுகையில், ‘‘எனது மகன் கல்வீச்சில் மரணமடைந்துள்ளார். அவரது மரணத்திற்கு அரசு தான் பொறுப்பு. மத்திய அரசில் இருந்து யாரும் எங்களிடம் இது வரை பேசவில்லை. மாநில அரசு சார்பிலும் இறுதி சடங்கில் யாரும் கலந்துகொள்ளவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர் கர்நாடகா தேர்தலில் மும்முரமாக இருப்பதால் திருமணி குடும்பத்தாரை கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.