விழுப்புரம்:

ளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் விழுப்புரம் தொகுதி எம்.பி.யான விசிக ரவிக்குமார் ஆகியோர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து மனு கொடுத்த நிலையில், அவர்களின்  கோரிக்கையை ஏற்று, விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து  மத்தியஅரசு அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

உளுந்தூர் பேட்டையில் மத்தியஅரசு அதிகாரிகள் ஆய்வு

கடந்த2ந்தேதி அன்று டில்லியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும், பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் சத்தித்து பேசினார். அப்போது எஸ்சி, எஸ்டி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பிரச்சினை உள்ளிட்ட 19 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

அந்த மனுவில், எஸ்சி, எஸ்டி மாணவர்களின் பட்டப்படிப்பு கல்விக்கான உதவித்தொகை  தொடர வேண்டும் என்றும்,  மத்திய பட்ஜெட்டில் துணை திட்டங்களில் பட்டியலினத்தவருக்கு  மக்கள்தொகைக்கு இணையாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். விழுப்புரத்தில் நகைத் தொழிலாளர்களுக்கான பூங்கா மற்றும் உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் தொடங்க  வேண்டும் , கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை கூறப்பட்டிருந்தது.

இந்த மனுமீது நடவடிக்கை எடுப்பதாக நிர்மலா சீத்தாராமன் கூறிய நிலையில், இன்று மத்திய அரசு அதிகாரிகள் இன்று  உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம்  அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து, விசிக விழும்புரம் தொகுதி எம்.பி.  ரவிக்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் ஒன்றை அமைத்துத்தரவேண்டும் என மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தேன். இன்று அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவித்து உள்ளார்.