திருமாவளவனுக்கு திடீர் உடல்நலக் குறைவு : அப்போலோவில் அனுமதி

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி சென்ற திருமாவளவனுக்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளடு.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக் கொள்ள விழுப்புரம் மாவட்டம் வந்தார்.   அங்கு விக்கிரவாண்டி  சுங்கச்சாவடி அருகில் ஊள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி இருந்தார்.    அதன் பிறகு நேற்று அந்த பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவில் அருகில் மரக்கன்றுகள் நட்டார்.

பகவதி அம்மன் கோவில் ஒரு சிறு மலை மேல் உள்ளது.   அந்த கோயிலுக்கு செல்ல  படி ஏறிய போது திடீரென அவருக்கு மயக்கம் வந்துள்ளது.   அதனால் அந்த கோயில் வளாகத்தில் படுத்து ஓய்வெடுத்தார்.   அப்படி இருந்தும் மயக்கம் தீராததால் மெல்ல விடுதிக்கு வந்து மருத்துவரை அழைத்து சிகிச்சை பெற்றார்.

அவருக்கு குளுகோஸ் ஏற்றப்பட்டு முழுமையான ஓய்வில் இருந்தார்.   திருமாவளவன் மேற்கொண்டு கலந்துக் கொள்ள இருந்த அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டன.   இரவு 8.30 மணி வரை அவர் தங்கி இருந்த விடுதியில் சிகிச்சை பெற்ற அவர் அதன் பிறகு காரில் சென்னைக்கு திரும்பினார்.

இன்று காலை அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.