திருமாவளவனை தோற்கடித்த திருமாவளவன்!

--

07c40504-2419-41dc-8551-bb1ca349fe521

காட்டுமன்னார்குடியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் 87 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இவர் தோல்விக்கு இன்னொரு திருமாவளவனே காரணம் என சொல்லப்படுகிறது.

காட்டுமன்னார்குடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பாக போட்டியிட்ட முருகு. மாறன 48 ஆயிரத்து 450 வாக்குகள் பெற்றார். அடுத்ததாக வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் 48 ஆயிரத்து 363 வாக்குகள் பெற்றார். அதாவது 87 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

அதே நேரம், திருமாவளவன்  என்ற பெயர் கொண்ட இன்னொரு வேட்பாளர் 289 வாக்குகள் பெற்றுள்ளார்.

“குறிப்பிட்ட வேட்பாளரை தோற்கடிக்க, அதே பெயருள்ள நபர்களை போட்டியிட வைப்பது காலம்காலமாக நடந்து வருவதுதான்.  அந்த பாணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெற்றி வாய்ப்பை தவறவிட்டிருக்கிறார். ஆகவே மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவோம்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மத்தியில் குரல் எழும்பி உள்ளது.