அங்கனூர் கோயில் குடமுழுக்கு விழாவில் திருமாவளவன்

ங்கனூரில் உள்ள மாயவன் திருக்கோயிலில் நடந்த குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்ட திருமாவளவனுக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டது.

விடுதலை சிறுதைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் சொந்த ஊர் அரியலூர்  செந்துறை அருகே உள்ள அங்கனூர் ஆகும். இங்கு மாயவன் திருக்கோயில் உள்ளது.  இது திருமாவளவன் குடும்பத்தினரின் குலதெய்வ கோயில் ஆகும்.

இந்த நிலையில்அக்கோயிலின் குடமுழுக்கு விழாவில்  இன்று கலந்துகொண்டதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள திருமாவளவன், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

இந்தப் படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.