ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வ்க்கு ஆதரவு!:  திருமாவளவன் அறிவிப்பு

 

சென்னை:

ர்.கே.நகர் இடைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் அடுத்த மாதம் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிரமாக களத்தில் இறங்கி தேர்தல் பணிகளை செய்து வருகின்றன.

தி.மு.க. சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை ஆதரிக்கப்போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்; இடதுசாரி கட்சிகள் தி.மு.க.வுக்கு

ஆதரவளிக்க வேண்டும்  என்றார்.

, காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 6 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.