இந்துக் கோயில்களை எல்லாம் இடிக்க வேண்டும் : திருமா சர்ச்சைப் பேச்சு

சென்னை

ந்துக் கோயில்களை இடித்து விட்டு புத்த விகாரங்கள் கட்ட வேண்டும் என திருமாவளவன் பேசி உள்ளது சர்ச்சையை உண்டாகி இருக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பெரம்பூரில் ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளார்.  அங்கு அவர் ஆற்றிய உரை கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

திருமாவளவன், “இந்தியாவில் உள்ள இந்துக் கோயில்களை எல்லாம் இடித்துத் தள்ள வேண்டும்.  அந்த இடத்தில் எல்லாம் புத்த விகாரங்களைக் கட்ட வேண்டும்.  ஸ்ரீரங்கத்தில் திருவரங்கநாதர் பள்ளி கொண்டுள்ள கோயில்,  காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி கோவில் ஆகிய இடங்களிலும் அந்தக் கோயில்களை இடித்துத் தள்ள வேண்டும்.  அங்கும் புத்த விகாரங்கள் கட்டப்பட வேண்டும்” என பொதுக்கூட்டத்தில் பேசி உள்ளார்.

திருமாவளவனின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது