‘ஊபா’ சட்டத்தில் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்திக்கு 15நாள் நீதிமன்றகாவல்

சென்னை:

த்திய அரசுக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் மே17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தியை 15 நாள் காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம்  உத்தரவிட்டு உள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத  திட்டங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து போராட்டம் நடத்தி வருபவர் மே17 இயக்கத்தின் தலைவர்  திருமுருகன் காந்தி.

சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத செயல்கள் குறித்து ஐநா சபையில் எடுத்துரைத்தார். அப்போது, சேலம்-சென்னை 8 வழிச்சாலை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்பாக, பேசிவிட்டு திரும்பியபோது, பெங்களூர் விமான நிலையத்தில், திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார்.

அவர்மீது விசாரணையின்றி 6 மாதங்கள் சிறையில் அடைக்கும் ஊபா எனப்படும் கடுமையான சட்டம் பாய்ந்தது. இதுதொர்பான விசாரணையை தொடர்ந்து அவரை 15 நாட்கள் காவலில் வைக்கும்படி  எழும்பூர் நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஏற்கனவே திருமுருகன் காந்தி மீது,  ஈழத்தமிழர்களுக்காக மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தியதற்காக  குண்டர் சட்டத்தை பாய்ச்சியது. ஆனால், அதை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்தது.

இந்த நிலையில் தற்போது ஊபா சட்டத்தில் கைது செய்துள்ளது. மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட 2 வழக்கில் திருமுருகனுக்கு 15 நாள் காவல் உறுதி செய்யப்பட்டது. மே-17 இயக்க ஒருங்கிணைப் பாளர் திருமுருகன் மீது இதுவரை  மொத்தம் 34 வழக்குகள் பதிவாகியுள்ளன.