கோலாகலமாக நடைபெற்றது திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம்

திருப்பதி :

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று வெகு விமரிசையாக கும்பாபிஷேச கம் நடைபெற்றது. பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம்  எழுப்ப வேத விற்பன்னர்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அஷ்டபந்தன பாலாலய மகா சம்ப்ரோக்ஷணம் என்ற பெயரில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடத்தப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு கும்போபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 11-ம் தேதிமுதல் பக்தர்கள் தரிசனத்துக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந்து  கோவிலில் உள்ள மூலவர், துவாரபாலகர்கள், விமான வெங்கடேஸ்வர சுவாமி, கருடாழ்வார், வரதராஜ சுவாமி உள்ளிட்ட சன்னதிகளுக்காக 28 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் இன்று காலை 10.16 மணிக்கு தொடங்கிய குடமுழுக்கு 12 மணி அளவில் நிறைவு பெற்றது.  திருப்பதி ஏழுமலையான் கோவில் குடமுழுக்கை காண நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் திருப்தியில் குவிந்திருந்தனர்.

இதற்காக கடந்த 9ம் தேதி முதல் நாளை (17ந்தேதி) காலை 6 மணி வரை சுவாமி சேவைகள் ரத்து செய்யப்பட்டிரு;ந்தது. பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த திருப்பதி தேவஸ்தானம்  பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருந்தால், கடந்த குடமுழுக்கை விட தற்போது பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தாகவே கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி