இலவசம்.. இலவசம்… இரண்டு லட்சம் திருப்பதி லட்டு

திருப்பதி

திருப்பதி கோவிலில் லட்டுக்கள் ஊழியர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

ஏழுமலையானை போலவே, திருப்பதி லட்டும் உலகம் முழுக்க பிரசித்தம்.

மலை ஏறி பெருமானைத் தரிசனம் செய்வோர், மொட்டை போடுகிறார்களோ இல்லையோ, லட்டு வாங்காமல் கீழே இறங்குவதில்லை.

கொரோனா வைரஸ் காரணமாகத் திருப்பதி தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு விநியோகம் செய்வதற்காக 2 லட்சத்து 70 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு இருப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில்-

கொரோனா வைரஸ்,  திருப்பதி லட்டுகளைத் தேங்க வைத்து விட்டது.

என்ன செய்யலாம் என யோசித்த திருப்பதி தேவஸ்தானம், தங்களிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு அவற்றை ஓசியில் வழங்க முடிவு செய்துள்ளது.

திருப்பதி தேவஸ்தானத்தில் நிரந்தர பணியாளர்கள், தற்காலிக ஊழியர்கள் என மொத்தம் 23 ஆயிரம் பேர் வேலை பார்க்கிறார்கள்.

அவர்களுக்கு ஆளுக்கு தலா 10 லட்டு என இலவசமாக வழங்கப்போகிறார்கள்.

தெலுங்கு வருடப் பிறப்பான ‘உகாதி’’ தினத்தன்று –

திருப்பதி லட்டுக்கு இப்படியொரு நிலைமை..

 

– ஏழுமலை வெங்கடேசன்