128 ஆண்டுகளுக்கு மூடப்பட்ட ஏழுமலையான் கோவில்… வைரலாகும் வீடியோ…

திருமலை:

ந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திருப்பதி கோவில் 2 நாட்கள் அடைக்கப்பட்டுள்ளது. 128 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் 2 நாள் கோவில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது.

தினசரி லட்சக்கணக்கானோர் வந்து குவியும் திருப்பதி… தற்போது ஆள் அரவமின்றி காணப்படுகிறது. ஒருசில நபர்களே ஏழுமலையான தரிசித்து செல்கின்றனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது…

ஏற்கனவே 1892ம் ஒருமுறை திருப்பதி கோவில் மூடப்பட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கிற்ன. அன்பிறகு, தற்போதுதான், அதாவது, 128 ஆண்டுக்கு பிறகு, தற்போதுதான் திருப்பதியில் 2 நாள் பக்கதர்களுக்கு தரிசனம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டு, கோவில் மூடப்பட்டுஉள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது…

கொரோனா சமுதாய பரவலைக் குறைக்க அல்லது தடுக்க அனைத்து மத நிறுவனங்களும்  இதுபோன்று செயல்பட வேண்டியது அவசியம்…

கொரோனா நோய் பரவலை தடுக்க நாம் ஒவ்வொருவரும், முக்கியமாக கைகளை சுத்தமாக கழுவுதல், கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்லாமல் தவிர்த்தல், ஒருவருக்கொருவர் இடைவெளி விட்டு இருத்தல் அவசியம்…

You may have missed