திருமலை

நேற்று திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் பவித்ரோத்வம் தொடங்கி உள்ளது.

திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை பவித்ராத்சவம் திருவிழா நடப்பது வழக்கமாகும்.

கோவிலில் உண்டாகும் தோஷங்களை நீக்க இந்த உற்சவம் நடைபெறுகிறது.

இந்த ஆண்டுக்கான பவித்ரோத்சவம் திருவிழா நேற்று தொடங்கியது.

இந்த திருவிழா பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு திருமஞ்சனத்துடன் தொடங்கியது.

வழக்கமாக இதைக் காணப் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.

 

தற்போது கொரோனா பரவல் அதிகமுள்ளதால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில்  கட்டுப்பாடுகளுடன் சாமி தரிசனம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.