ஏழுமலையான் இதிலும் டாப்தான்: பக்தர்களின் முடி ரூ.10.07 கோடிக்கு ஏலம்!

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் செலுத்திய முடிகள் ரூ.10.07 கோடிக்கு ஏலம் போய் உள்ளது. இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேட்டதை கொடுக்கும்  திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பதும் வாழ்வில் திருப்புமுனை வரும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. அதை போற்றும் விதமாக, தங்களின் முடிகளை ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

இவ்வாறு காணிக்கையாக செலுத்தப்படும் லட்சக்கணக்கானோர்  முடி மூட்டை மூட்டையாக கட்டி வைக்கப்பட்டு, மொத்தமாக ஏலம் விடப்படுவது வழக்கம்.

அதன்படி, ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் 8,200 கிலோ முடிகளை ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்டது.

இந்த நிலையில், தற்போது பக்தர்கள் செலுத்திய 11 ஆயிரத்து 800 கிலோ அளவிலான  தலைமுடி ஆன் லைன் மூலம் ஏலம் விடப்பட்டது. இது ரூ.10.07 கோடிக்கு ஏலம் போய் சாதனை படைத்துள்ளது.

ஏற்கனவே வசூலில் நம்பர்1ஆக இருந்து வரும் ஏழுமலையான் பக்தர்களின் முடியையும் பணமாக்கிக் கொள்வதிலும் நம்பர் 1 ஆக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.