சென்னை:

திருபுவனத்தை சேர்ந்த ராமலிங்கம் கொலை செய்யப்பட்டது தொடர்பாக  புதுச்சேரி, திருச்சி, கும்பகோணம் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்கள் மற்றும் எஸ்டிபிஐ அலுவலகங்க ளில் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் மதமாற்றம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், திருபுவனத்தை சேர்ந்த பாமக நிர்வாகி ராமலிங்கம் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பான விசாரணையில் 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கில் பல அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும்,இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது  கருதி வழக்கை தேசிய புலனாய்வு ஏஜன்சிக்கு கடந்த மார்ச் 25ந்தேதி மாற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து ராமலிங்கம் கொலை வழக்கை தேசிய புலனாய்வு துறை ஏடிஎஸ்பி சவுகத் அலி தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்த குழுவினர்  திருச்சி, பாலக்கரை யில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில், அதிரடி சோதனை நடத்தினர்.

கும்பகோணத்தில் உள்ள பழைய மீன் அங்காடி அருகே உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகத்திலும், கே.எம்.எஸ் நகரில் உள்ள அப்துல் மஜீத் என்பவர் வீட்டிலும் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி, காரைக்காலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைமை அலுவலகத்தி லும், அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் குத்தூஸ் என்பவரின் வீட்டிலும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர். இதன் காரணமாக அந்த பகுதிகளில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.