திருவள்ளூரில் பெண் காவலர் தற்கொலை முயற்சி!

திருவள்ளூர் மாவட்டத்தில் பெண் காவலர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் பணிபுரிகிறார்  ஆயுதப்படை பெண் காவலர் பிரிதிமா. இவர் இன்று காலை தனது வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது அவரது  அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக ஓடிவந்து பார்த்தனர்.  தூக்கில் தொங்கி திணறிக்கொண்டிருந்த பிரிதிமாவை, மீட்டு  திருவள்ளூர் அரசு மருத்துவமைனயில் அனுமதித்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்து போலீசார், காவலர் பிரிதிமா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே,  பணிசுமை காரணமாக பிரிதிமா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.