சென்னை:
ரித்துவாரில் திருவள்ளுவர் சிலை நிறுவ ஏற்பாடு செய்த உத்தரகான்ட் முதல்வருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி தெவித்து கடிதம் எழுதி உள்ளார்.

ஜெயலலிதா ஹரிஷ் ராவத்
ஜெயலலிதா                               ஹரிஷ் ராவத்

பா.ஜ.கவை சேர்ந்த  தருண் விஜய் எம்.பி. திருவள்ளுவர் சிலையை கங்கை கரையில் அமைக்க முயற்சி எடுத்து ஹரித்துவார் கொண்டு  சென்றார். ஆனால்  அங்கு  சிலையை நிறுவ எதிர்ப்பு கிளம்பியதால், சிலை நிறுவப்படாமல் அருகே உள்ள ஒரு பூங்காவில் கறுப்பு பிளாஸ்டிக் பேப்பரால் சுற்றப்பட்டு கிடந்தது.
இது தமிழக மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி தமிழக முதல்வர் ஜெயலலிதா, உத்தரகான்ட் முதலவர் ஹரிஷ் ராவத்துக்குக்கும், பிரதமர் மோடிக்கும் , சிலையை நிறுவ ஏற்பாடு செய்யும்படி கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள உத்தரகான்ட் முதல்வர் , ஹரித்துவாரில் உள்ள மேளாபவனில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலையை நிறுவ  ஏற்பாடு செய்துள்ளது பற்றி எழுதியிருந்தார்.
இதற்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்: ஹரித்துவாரில் தமிழக மக்களால் தெய்வப்புலவராகப் போற்றப்படும் திருவள்ளுவருக்கு சிலை அமைக்கும் விவகாரம் தொடர்பாக, தமிழகத்தில் பெரிய அளவில் சர்ச்சைகளும், அமைதியின்மையும் ஏற்பட்டுள்ளதை திரு.ராவத் அறிவார் என குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக, தாம் பிரதமருக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளதையும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த உணர்ச்சிகரமான பிரச்சினையில், தமிழக மக்களின் பெருகிவரும் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, திரு.ஹரிஷ் ராவத் இப்பிரச்சினையில் விரைவாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நடவடிக்கை மேற்கொண்டதற்காக தாம் நன்றி தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஹரித்துவாரில் உள்ள மேளாபவனில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலையை நிறுவ திரு.ஹரிஷ் ராவத் ஏற்பாடு செய்துள்ளது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
திரு.ஹரிஷ் ராவத் மேற்கொண்ட இந்த உடனடி மற்றும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைக்காக தமிழக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.